திருப்பூர் அருகே பின்னலாடைத்துறைக்கு தேவையான நூல், சாயம், துணிகளை கொண்ட 202 அரங்குகளுடன் யார் னெக்ஸ், டெக்ஸ் இந்தியா, டைகெம் முப்பெரும் தொழில் கண்காட்சி நேற்று தொடங்கியது. கண்காட்சியை திருப்பூர் ஏற் றுமதியாளர்கள் சங்க நிறுவனர் சக்திவேல் தொடங்கி வைத்தார்.
திருப்பூர் திருமுருகன்பூண்டியில் உள்ள இந்தியா நிட்பேர் வளாகத்தில் யார்னெக்ஸ், டெக்ஸ் இந்தியா, டைகெம் டெக்ஸ் பிராசஸ் ஆகிய முப்பெரும் தொழில் கண்காட்சி நேற்று தொடங்கியது. கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ண மூர்த்தி வரவேற்றார்.
கண்காட்சியை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிறுவனர் சக்திவேல் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். ஏற்றுமதியா ளர்கள் சங்க தலைவர் கே. எம். சுப்பிரமணியன், பொதுச்செய லாளர் திருக்குமரன், துணை தலைவர் இளங்கோவன், நிட்மா தலைவர் அகில் ரத்தினசாமி, செயலாளர் ராஜாமணி உள்ளிட் டவர்கள் கலந்து கொண்டனர்.