வேன் கவிழ்ந்து 20 பேர் காயம்

7575பார்த்தது
வேன் கவிழ்ந்து 20 பேர் காயம்
அவினாசியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் இறந்த உறவினர் ஒருவருக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சிக்காக ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள பவானி கூடுதுறைக்கு வேனில் சென்றுள்ளனர். அங்கு திதி கொடுத்துவிட்டு மீண்டும் அங்கிருந்து அவினாசிக்கு புறப்பட்டனர். அவர்களது வேன் சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஊத்துக்குளி பல்ல கவுண் டம்பாளையம் அருகே வந்தது. அங்கு பாலம் வேலை நடை பெற்றுக் கொண்டிருப்பதால் புறவழிச் சாலையில் வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர குழியில் கவிழ்ந்தது. இதனால் வேனில் இருந்தவர்கள் அபயக்குரல் எழுப்பினர். இவர்களின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டனர். அதன்படி மொத்தம் 20 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் முதலுதவி சிகிச்சைக்காக அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்து குறித்து தகவல் கிடைக்கப்பெற்ற ஊத்துக்குளி போலீ சார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தின் காரணமாக சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி