உடுமலை திருப்பதி கோவிலில் தஞ்சாவூர் ஆதினம் சிறப்பு வழிபாடு

62பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை தளிரோட்டில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ வெங்கடேச பெருமாள் திருப்பதி கோவிலில் புரட்டாசி மாதம் 4 வது சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீவெங்கடேச பெருமாளுக்கு தங்க கவசம் அலங்காரம் செய்யப்பட்டு பால் தயிர் பன்னீர் புஷ்பம் உட்பட 16 வகை அபிஷேகங்கள் மற்றும் திருமஞ்சனம் மேற்கொள்ளப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.

க்ஷன்று தஞ்சாவூர் முனைவர் ஸ்ரீ சுவாமிநாத தேசிக சுவாமிகள் ஸ்ரீ காரியம் திருக்கயிலாய ஸ்கந்த பரம்பரை சூரியனார் கோயில் ஆதீனம் திருப்பதி கோவிலுக்கு வருகை புரிந்தார் அப்போது கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது பின்னர் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் உட்பட பல்வேறு தெய்வங்களுக்கு வழிபாடு நடத்தினார். இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று வெங்கடேச பெருமாளை வழிபட்டனர்.

உடுமலை மடத்துக்குளம் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் பக்தர்களுக்கு லட்டு துளசி தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்பட்டது. புரட்டாசி 4வது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகளுக்கான ஏற்பாடுகளை உடுமலை திருப்பதிஸ்ரீ பாலாஜி சாரிடபிள் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

தொடர்புடைய செய்தி