தெருநாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதி

63பார்த்தது
தெருநாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதி
பெருமாநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட ஆறு வழிச்சாலை குன்னத்தூர் ரோடு பைபாஸ் பாலம் சின்ன பள்ளம் என்கிற இடத்தில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள் ளது. இதனால் பொதுமக்கள், சிறுவர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். நாய்கள் ஆக் ரோஷமாக சுற்றி திரிவதால் இந்த பகுதி மக் களிடையே அச்சம் நிலவுகிறது. மேலும் வாகன ஓட்டிகளை பின் தொடர்ந்து துரத்தி செல்கின்றது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகிறது. பொதுமக்கள் நாய் கடியிலிருந்து தற்காத்துக் கொள்ள போராடு கின்றனர்.
இதில் குறிப்பிட்ட நாய்கள் ரேபிஸ் நோயோடு சுற்றிதிரிகின்றது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. மாவட்ட நிர்வாகம் எத்த னையோ நடவடிக்கைகள் எடுத்தும் தெரு நாய்கள் தொல்லை குறைந்தபாடில்லை. சமீப காலமாக சாலைகளில் அதிக எண்ணிக்கையில் நாய்கள் சுற்றித்திரிகின்றது. சாலையோரம் இருக்கும் குப்பைகள் அதில் இருக்கும் கழிவுகள் எல்லாம் எடுத்து உணவுக்காக ஆக்ரோஷமாக நாய் ஒன்றுடன் ஒன்று சண்டை போட்டுக்கொள்கிறது. நடு ரோட்டில் வீசி செல்வதால் துர்நாற்றம் ஏற் பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இத னால் ஊராட்சி நிர்வாகம் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க பொது மக் கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி