மக்களுடன் முதல்வர்; 500 க்கும் மேற்பட்ட மனுக்கள்

61பார்த்தது
திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேலாயுதம்பாளையம் மற்றும்
செம்பியநல்லூர் கிராம ஊராட்சிகளுக்கான "மக்களுடன் முதல்வர்" திட்டம் முகாம், அவிநாசி அடுத்த ஆட்டையாம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.
இம்முகாமை வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் ஊராட்சி தலைவர்கள் முன்னிலையில் துவங்கப்பட்டது.

முகாமில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் தங்களுக்குரிய முகாம்களை அமைத்திருந்தனர்.
மேலும் இ-சேவை மையங்களும் அமைக்கப்பட்டு இருந்தது. முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்களின் மனுக்களை பதிவு செய்தனர்.

சுமார் 500 க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. நிகழ்சியில் அவிநாசி தி. மு. க ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் மன்ற உறுப்பினர்கள், அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி