குருகுல மாணவர்களுக்கு மஹோத்ஸவ பயிற்சி சான்றிதழ்

66பார்த்தது
குருகுல மாணவர்களுக்கு மஹோத்ஸவ பயிற்சி சான்றிதழ்
பெங்களூரு ஸ்ரீகுருகுலவேத ஆகம பாட சாலை மாணவர்களுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா அவினாசி லிங்கேசுவரர் கோவிலில் நடந்தது.

நிகழ்ச்சியில் வேத ஆகம பாடசாலை முதல் வர் சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார் வரவேற்றார். அவினாசி வாகீசர் மடாலய காமாட்சி தாச சாமிகள் ஆசியுரை வழங்கினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக பழனி தண்டாயுத பாணி சுவாமி கோவில் அறங்காவலர் கே. எம். சுப்பிரமணியம், அவினாசி பழனியப்பா மெட்ரிக்குலேஷன் பள்ளி நிர்வாக இயக்குனர் டி. ராஜ்குமார், அவினாசி லிங்கேசுவரர் கோவில் செயல் அலுவலர் வெ. பீ. சீனிவாசன், அறங்காவலர்கள் பொன்னுசாமி, ஆறுமுகம், விஜயகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அவினாசி லிங்கேசுவரர் கோவில் அறங்காவ லர் குழு தலைவர் ஆ. சக்திவேல் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி சிறப்புரையாற்றி வேத ஆகம பாடசாலை மாணவர்களுக்கு நற்சான் றிதழ்களை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி