திருமுருகன்பூண்டியில் டிசம்பர் மாத இறுதிக்குள் பணிகள் முடியும்!

57பார்த்தது
திருப்பூர் அருகே திருமுருகன் பூண்டியில் மினி டைட்டல் பார்க் ரூ. 40 கோடி மதிப்பில் 9 அடுக்குமாடி கட்டிட கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஆய்வு செய்தார். கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார்.
இதன் பின்னர் செய்தியார்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கூறியதாவது,

திருமுருகன்பூண்டியில் அமைய உள்ள மினி டைட்டல் பார்க் பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருகிற டிசம்பர் மாத இறுதிக்குள் பணிகளை முடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முடிவெடுப்பார். அந்த மகிழ்ச்சியான அறிவிப்பு எப்போது வெளிவரும் என எதிர்பார்த்து உள்ளோம்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளதால் திராவிட கட்சிகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. குறிப்பாக திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. பவள விழா கொண்டாடி வரும் திமுக, மக்கள் ஆதரவுடன் நூற்றாண்டு விழாவும் காணும். பொதுமக்கள் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்து அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற வைத்துள்ளனர். யார் கட்சி ஆரம்பித்தாலும் திமுகவின் பணி வழக்கமான வகையில் நடைபெறும் என்றார்.

தொடர்புடைய செய்தி