வெள்ளகோவில் தீபிடித்து எறிந்த கோழித்தீவனம் ஏற்றிவந்த  லாரி

6456பார்த்தது
வெள்ளகோவில் கரூர் சாலையில் கோழி தீவனம் ஏற்றி கொண்டு லாரி சென்றுள்ளது. லாரியானது கோவையில் உள்ள கோழி தீவனம் தயாரிக்கும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான. 310 முட்டைகளில் 19 டன் அளவிலான கோழி தீவனங்கள் ஏற்றி கொண்டு  பாப்பம்பாடியில் இருந்து ஒரத்தநாட்டிற்கு கொண்டு செல்ல வெள்ளகோவில் வழியாக வந்துள்ளது. லாரியை கனகராஜ் (53) என்பவர் ஓட்டிவந்துள்ளார்.

வெள்ளகோவில் ஒத்தக்கடை பகுதியில் வரும் பொழுது லாரியில் ஒயர் கரும் வாசம் வந்துள்ளது. இதை அடுத்து சுதாரித்து கொண்ட ஓட்டுநர் வாகனத்தை மெதுவாக இயக்கியபடியே ஓட்டுநர் பகுதியிலும் லாரியின் பின் பகுதியையும் பார்த்துள்ளார். அப்போது பின்பகுதிகளில் இருந்து லேசாக புகைவருவதை பார்த்த ஓட்டுநர் சாலையின் இடதுபுறம் சாலை விரிவாக்க பணிகள் நடைபெறுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் சுதாரித்து கொண்டு சாலையில் வலதுபுறம் லாரியை நிறுத்தும் அளவிற்கு இடத்தை தேர்ந்தெடுத்து சாதுர்யமாக லாரியை எதிர் திசையில் நிறுத்திவிட்டு உயிர் தப்பினார்.

சம்பவ இடத்திற்கு தீயணைப்பு நிலைய அலுவலர் பிரபாகரன் தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள் 30 நிமிடங்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்..

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி