ஸ்ரீரங்கத்தில் நம் பெருமாள் தங்க கருட சேவை

80பார்த்தது
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை தேர்த் திருவிழாவில் நம்பெருமாள் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்தார்.

இக்கோயிலில் நம்பெருமாள் வருடத்தில் நான்கு முறை கருட வாகன சேவையில் பக்தர்களுக்கு காட்சி தருவார். இதில் மூன்று முறை தங்கக் கருட வாகனத்திலும் ஒரு முறை வெள்ளி கருட வாகனத்தில் எழுந்தருளுவார். சித்திரை மாதத்தில் நடைபெறும் விருப்பன் திருநாள் எனும் சித்திரை தேரோட்டம், தை மாதத்தில் நடைபெறும் பூபதி திருநாள் எனும் NE தைத் தேரோட்டம், பங்குனி மாதத்தில் 4 நடைபெறும் ஆதிபிர்மா திருநாள் எனும் கோரதம் (பங்குனி தேர்) ஆகிய விழாக்களில் நம்பெருமாள் தங்கக் கருடவாகனத்தில் எழுந்தருள்வார்

மாசி மாதத்தில் நடைபெறும் திருப்பள்ளியோடத்திருநாள் எனும் தெப்பத்திருவிழாவின் போது மட்டும் வெள்ளி கருட வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளுவார்.

நிகழாண்டு நடைபெற்று வரும் சித்திரைத் தேர்த்திருவிழாவில் 4 ஆம் நாள் திருச்சி ஆர்ய வைஸ்யாள் ஆஸ்தான மண்டபத்திலிருந்து தங்கக் கருடவாகனத்தில் நம்பெருமாள் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்தார். அப்போது வழிநெடுக ஏராளமான பக்தர்கள் நம்பெருமாளை தரிசனம் செய்தனர். விழாவில் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் மே 6-ஆம் தேதி காலை நடைபெறவுள்ளது

தொடர்புடைய செய்தி