திருச்சி மேல கல்கண்டார் கோட்டை நாகம்மாள் வீதி ஆறாவது குறுக்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் காவியா (வயது 19). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று வழக்கம்போல் கல்லூரிக்கு சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பினார். பின்னர் திடீரென வீட்டிலிருந்து மாயமாகிவிட்டார். இது குறித்து அவரது தாயார் வள்ளி பொன்மலை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவி காவியாவை தேடி வருகின்றனர்.
இதைப் போன்று மேல கல்கண்டார்கோட்டை அண்ணா தெரு பகுதியைச் சேர்ந்த முகமது சையது மகள் ஜனத்துள் பிர்தோஸ் (வயது 19) என்ற கல்லூரி மாணவியையும் காணவில்லை இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் இசிஇ முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.