திருச்சியில் சிட்ரோன் கார் சர்வீஸ் சென்டர் திறப்பு. 1919ம் ஆண்டு தொடங்கப்பட்ட சிட்ரோன் ஸ்டெல்லாண்டிஸ்க்கு சொந்தமான ஃபிரெஞ்ச் ஆட்டோமொபைல் பிராண்ட் ஆகும். இந்த நிறுவனமானது கார் தயாரிப்பில் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்துள்ளது. சிட்ரோன் கார் நிறுவனம் 100 நாடுகளைக் கடந்து 50 மில்லியன் கார்களை விற்பனை செய்துள்ளது. அதேபோல், ஆட்டோமொபைல் விற்பனையில் ஜெயராஜ் குழுமம் 100 ஆண்டுகளைக் கடந்து கொடிகட்டி பறக்கிறது. நூற்றாண்டு பெருமை கொண்ட இந்த இரு நிறுவனங்களும் தற்போது கைகோர்த்து கார் விற்பனையில் அதிகளம் செய்ய உள்ளனர்.
அந்தவகையில், திருச்சி – மதுரை பிரதான சாலையில் பஞ்சப்பூரில் ஜெயராஜ் நிறுவனத்தின் சார்பில் மிகப் பிரமாண்டமாகப் பிரத்யேக சிட்ரோன் கார் வொர்க்ஷாப் திறக்கப்பட்டது. மேலும் விற்பனை செய்யப்பட்ட சிட்ரோன் புதுவகைக் கார்களை சிட்ரோன் பிராண்ட் டைரக்டர் சிசிர் மிஸ்ரா, ஸ்டெல்லாண்டிஸ் வணிகப்பிரிவு இயக்குநர் சதீஷ் கண்ணன் மற்றும் ஜெயராஜ் குழும இயக்குநர் அஜய் ஜொனாதன் ஜெயராஜ் ஆகியோர் வாடிக்கையாளர்களிடம் சாவிகளை ஒப்படைத்தனர்.