முசிறி அருகே தா. பேட்டையில் கடும் பனிப்பொழிவு

59பார்த்தது
திருச்சி மாவட்டம், முசிறி அருகே தா. பேட்டையில் காலை நேரத்தில் கடும் பனிப்பொழிவு நிலவியது. காலை 8.00 மணிக்கு மேல் அப்பகுதியில் உள்ள வயல்வெளிகளிலும் காலை நேரத்தில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. சாலையின் எதிரே வருபவர்கள் தெரியாத அளவிற்கு மேக கூட்டம் போல் பனி காணப்படுகிறது. கோயில் கோபுரங்கள், வீடுகளின் கட்டடங்களை மறைத்தவாறு பனிமூட்டம் நிலவியது.

 இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிரச் செய்தவாறு சாலைகளில் பயணிக்கின்றனர். காலை 8.00 மணி ஆன நிலையிலும் கூட இந்த பனிப்பொழிவு நிலவி வரும் சூழலில் சூரியன் தனது செந்நிற கதிர்களை விரித்து பனிப்பொழிவை விரட்டி அடிக்கும் வகையில் உதயமாகும் காட்சியும் கண்ணுக்கு விருந்தாக அமைந்திருந்தது. வீடுகளை சுற்றி பனிமூட்டம் நிலவியது சிறுவர் சிறுமியர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.

தொடர்புடைய செய்தி