மரம் நடும் வாரம்-மரம் நட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்

74பார்த்தது
மரம் நடும் வாரம்-மரம் நட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்
வன மஹோத்ஸவ் என்ற மரம் நடும் வார விழா, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் வாரத்தில், மரங்களை வளர்ப்பதன் மற்றும் அவற்றைப் பாதுகாப்பதன் அவசியத்தை பொது மக்களிடையே புகுத்துவதற்காக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நேரு நினைவு கல்லூரி மாணவர்கள், திருப்பட்டூர் கோவில் அறக்கட்டளை மற்றும் தொண்டு நிறுவங்கள் உடன் இணைந்து திருப்பட்டூர் குளத்தை சுற்றி பல வகையான பழ மரங்கள் நடப்பட்டன. இந்த பழ மரங்கள் வளர்ந்து பயன் தரும் போது கிராமத்தை சுற்றி வலம் வரும் குரங்கு கூட்டங்களுக்கு உணவு கிடைக்கும். இதன் மூலம் பொது மக்களுக்கு குரங்குகள் மூலம் வரும் இடையூறு தவிக்கப்படும் என்று விளக்கி திருப்பட்டூர் கோவில் அறநிலையத்துறை அதிகாரி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி திருச்சி பண்பலை 102. 1 வானொலி மூலம் நேரடியாக ஒலிபரப்ப பட்டது.

கல்லூரித் தலைவர் திரு பொன். பாலசுப்பிரமணியன், கல்லூரி செயலர் பொன். இரவிச்சந்திரன், முதல்வர் முனைவர் வெங்கடேசன், அனுமதி மற்றும் வழிகாட்டுதல் உடன் இந்த நிகழ்ச்சியை இயற்பியல் துறை உதவி பேராசிரியர் பொ. ரமேஷ் ஒருங்கிணைத்தார்.

தொடர்புடைய செய்தி