நடந்து சென்றவரை தாக்கிய மூன்று மர்ம நபர்கள்

75பார்த்தது
நடந்து சென்றவரை தாக்கிய மூன்று மர்ம நபர்கள்
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலைராஜன் திருச்சியில் உள்ள தனியார் ஜவுளிக்கடையில் பணிபுரிந்து வருகிறார். சம்பவம் நடந்த நேற்று கல்பாளையம் சக்தி நகர் அக்ஷயா கார்டன் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் அவரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மூவரும் சேர்ந்து கலைராஜனை தாக்கியதில் தலையில் காயமடைந்தவர் மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இதுகுறித்து காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அவரை தாக்கிய மூனறு மர்மநபர்கள் யார் என்பது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி