திருச்சியில் இருந்து 141 பயணிகளுடன் ஷார்ஜா புறப்பட்ட விமானம் பறக்கத் தொடங்கியவுடன் சக்கரங்களை உள் இழுக்க முடியாமல் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் திருச்சியிலேயே தரையிறக்குவதில் சிக்கல் நீடித்து
இரண்டு மணிநேரத்திற்கு மேல் வானில் வட்டமிட்டு வந்த #AirIndia விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
தீப்பற்றுவதை தடுக்க எரிபொருள் குறைந்த பிறகு விமானத்தை தரையிறக்க விமானிகள் திட்டம்
இட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி விமான நிலையத்தில் 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மற்றும்
தீயணைப்பு வாகனங்களும் விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்தன,
கூடவே மருத்துவக் குழுவும் விரைந்து வந்துள்ளது.
இந்நிலையில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது எந்த அசம்பாவிதமும் இன்றி
சாதுரியமாக விமானிகள் விமானத்தை தரை இறக்கினர்.