திருவரம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொக்கரசம்பேட்டை பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர் அப்போது அங்கிருந்த பெட்டிக்கடை ஒன்றில் ரஹ்மத் கனி என்பவர் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வந்தார். இதை அடுத்து 400 ரூபாய் மதிப்புள்ள ஹான்ஸ் புகையிலை பாக்கெட்டுகளை அவரிடம் இருந்து பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.