ஜே இ இ தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற பச்சைமலை மாணவி

58பார்த்தது
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள பச்சைமலை சேர்ந்தது சின்ன இலுப்பூர் கிராமம் இந்த கிராமத்தி ல் பழங்குடியின மக்களின் குழந்தைகள் பயில்வதற்காக அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் பயின்ற அதே ஊரை சேர்ந்த மாணவி ரோகினி இவரது தந்தை மதியழகன் இவர் கேரளாவில் கூலி வேலை செய்து வருகிறார் இவரது தாயார் வசந்தி இவரும் பச்சை மலையில் விவசாயம் செய்து வருகிறார். இவர் தான் ரோகிணியை வளர்த்து வருகிறார் இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஜே. இ. இ போட்டித் தேர்வில் இவரும் கலந்து கொண்டார் தற்போது அதனுடைய முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் ரோகிணி மலைவாழ் பழங்குடியின மாணவர்களில் முதல் மாணவியாக தேர்வாகி சாதனை படைத்துள்ளார். அதில் 73. 8 மதிப்பெண்கள் பெற்று உள்ளார் அதனால் அவருக்கு திருச்சி என். ஐ. டி. ல் கெமிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் தேர்வாகி உள்ளார்.
தற்போது 60 ஆண்டுகளுக்கு பின்பு பழங்குடியின மாணவி ஒருவர் தேர்வாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைப் பற்றி அந்த மாணவியை கூறுகையில் நான் தேர்வுக்காக சிறப்பு பயிற்சி எதுவும் மேற்கொள்ளவில்லை எங்கள் பள்ளியில் நடத்திய பாடப்பிரிவுகளையே நான் பயின்றேன். அதுமட்டுமின்றி எனக்கு எனது குடும்பத்தினர் மிகவும் உறுதுணையாக இருந்தார்கள் நான் தேர்வாகியுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி