துறையூர் நீதிமன்றத்தில் சமத்துவநாள் உறுதிமொழியேற்பு

82பார்த்தது
துறையூர் நீதிமன்றத்தில் சமத்துவநாள் உறுதிமொழியேற்பு
துறையூர் நீதிமன்றத்தில் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி சமத்துவநாள் உறுதிமொழியேற்றனர்.

தமிழகத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் சமத்துவ நாளாக அனுசரிக்கப்பட்டு அரசு அலுவலகங்களில் சமத்துவ உறுதிமொழி ஏற்கப்படுகிறது. அம்பேத்கர் பிறந்த நாள் ஞாயிற்றுக்கிழமை வருவதால் துறையூர் நீதிமன்றங்களில் வார இறுதி நாளான நேற்று சமத்துவ நாள் உறுதிமொழியேற்றனர்.
துறையூர் மாவட்ட உரிமையியில் நீதிபதி சத்தியமூர்த்தி தலைமையில் உரிமையியல் நீதிமன்றத்திலும், குற்றவியல் நீதித்துறை நடுவர் நர்மதா ராணி தலைமையில் குற்றவியல் நீதிமன்றத்திலும் நீதிமன்றப் பணியாளர்கள் உறுதிமொழியேற்றனர்.

தொடர்புடைய செய்தி