அடையாளம் தெரியாத கார் மோதிய விபத்தில் பைக் ஓட்டுநர் பலி

63பார்த்தது
அடையாளம் தெரியாத கார் மோதிய விபத்தில் பைக் ஓட்டுநர் பலி
திருச்சி சோழன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் இவர் தனது பஜாஜ் பிளாட்டினா இருசக்கர வாகனத்தில் திருச்சியில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் உள்ள அம்மாபேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத கார் மோதி விபத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த கார்த்திக் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இச்சம்பவம் குறித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற இனாம்குளத்தூர் போலீசார் கார்த்திக்கின் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விபத்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி