லால்குடி அருகே உள்ள கோமக்குடி பகுதியைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன் நேற்று திருச்சி துவாக்குடி ராவுத்தன்மேடு பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது இவருக்கு எதிரே வந்த கார் ஒன்று இவருடைய வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் கீழே விழுந்த கமலக்கண்ணனுக்கு வலது தோள்பட்டை மற்றும் வலது கால் பகுதியில் காயம் ஏற்பட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து சம்பவம் குறித்த புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனரான காவேரி நகர் பகுதி சேர்ந்த பூபதிராஜன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து துவாக்குடி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.