துறையூரில் 11: 00 மணி நிலவரப்படி 26 சதவீத வாக்குப்பதிவு

578பார்த்தது
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட துறையூர் சட்டமன்ற தொகுதியில் 11 மணி நிலவரப்படி 26 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் நடத்தும் அதிகாரி தகவல் வெளியிட்டுள்ளார். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் துறையூர் சட்டமன்ற தொகுதியில் 11 மணி நிலவரப்படி ஆண் வாக்காளர்கள் 30302 பேரும் பெண் வாக்காளர்கள் 30, 123 பேரும் மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என வாக்குகள் பதிவாயிருந்த நிலையில் 26 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி