திருச்சி: கடன் பிரச்சினையால் ஆட்டோ டிரைவர் தற்கொலை

69பார்த்தது
திருச்சி: கடன் பிரச்சினையால் ஆட்டோ டிரைவர் தற்கொலை
திருவெறும்பூர் அருகே உள்ள பூலாங்குடி காலனி வடக்கு முதல் தெருவை சேர்ந்தவர் வெற்றிவேல் ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சாந்தி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பள்ளிக்கு மாணவர்களை ஆட்டோவில் ஏற்றி இறக்கும் பணி செய்து வந்தார். 

இந்நிலையில் நேற்று (நவம்பர் 28) காலை பள்ளிக்கு மாணவர்களை அழைத்துச் செல்ல வரவில்லை என்று பெற்றோர்கள் இவரது வீடு தேடிச் சென்று பார்த்த பொழுது வீட்டின் சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. 

இது குறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் நவல்பட்டு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்த போலீசார் வெற்றிவேல் கடன் பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி