முசபியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

85பார்த்தது
முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.



திருச்சி மாவட்டம் முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வட்ட கிளைச் செயலாளர் அமுதா தலைமை வகித்தார். சங்க முன்னணி நிர்வாகிகள் சித்ரா, சுதா, ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து , பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் வேண்டும், சத்துணவு மற்றும் அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர்கள், எம். ஆர். பி செவிலியர்கள் உள்ளிட்ட சிறப்பு தொகுப்பு ஊதியம், மதிப்பு ஊதியம் பெறும் 3. 5 லட்சம் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியமும், ஓய்வூதியமும் வழங்கிட வேண்டியும், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை, பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தி சத்துணவு மையங்கள் மூலமாக சத்துணவு ஊழியர்களை கொண்டு நடைமுறைப்படுத்தி அமுல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். நிறைவில் லீலாவதி நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி