₹5, 00, 000 பணத்தாள்களால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

58பார்த்தது
ஆடி மாதத்தில் வரும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. இந்த நாட்களில் அம்மனுக்கு பூஜை செய்து வழிபட்டால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நல்லதே நடக்கும் என்பதே நம்பிக்கை.

கடந்த ஆடி முதல் வெள்ளிக்கிழமையில் அம்மன் கோயிலுக்கு பெண்கள் குடும்பத்துடன் சென்று பூஜை செய்து வழிபட்டனர். அதேபோல் இன்று 2வது ஆடி வெள்ளிக்கிழமையும் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.


இந்த நிலையில் ஆடி மாத வெள்ளிக்கிழமை முன்னிட்டு திருச்சி வரகனேரி நித்தியானந்தபுரத்தில் முத்துக்கண் மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

அதன்படி உலக மக்கள் அனைவரும் செல்வ செழிப்புடன் வாழ வேண்டி முத்துக்கண் மாரியம்மனுக்கு சுமார் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டது.

இதில், ரூ. 500, ரூ. 200, ரூ. 100, ரூ. 50, ரூ. 20, ரூ. 10 என அனைத்து ரூபாய் நோட்டுக்களாலும் அலங்காரம் செய்யப்பட்டது. இந்த வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி