திருவெறும்பூர் பாரதிபுரம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பாரதிபுரத்தில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு மூலவர்களான வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு மஞ்சள், பால், தயிர், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், திரவிய பொடி, அரிசி மாவு, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரணை நடைபெற்றது. இதில் அப்போதைய சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனுக்கு அரோகரா அரோகரா என பக்தி கோஷமிட்டு சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டனர்.