திருச்சி குட்செட் சாலை பகுதியைச் சேர்ந்தவர் செபஸ்டியன் மகன் சுமன் (வயது 18). இவர் நேற்று (நவம்பர் 12) தனது நண்பர்களுடன் முக்கொம்பு பகுதியில் காவிரி ஆற்றில் குளிப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது திடீரென அவர் சுழலில் சிக்கி தண்ணீரில் மூழ்கி இறந்தார். தகவலின் பேரில் சம்பவத்திற்குச் சென்ற தீயணைப்புத் துறையினர் உயிரிழந்த சுமனின் உடலை மீட்டு காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.