கன்னியாகுமரி வன்னியூரைச் சார்ந்தவர் ராணுவ வீரர் ஸ்டாலின் ஜோஸ் (40). இவருக்கு 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் குழந்தை இல்லை. மன உளைச்சலில் சம்பவத்தன்று இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். மனைவியை அடித்து வீட்டிற்கு வெளியே துரத்தியுள்ளார். வீட்டின் கதவை அடைத்து விட்டு தூக்கில் தொங்கியுள்ளார். நேற்று (12ஆம் தேதி) காலை அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து பார்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.