திண்டுக்கல் வேடசந்தூர் அருகே கம்பி வேலி அமைக்கப் பயன்படும் கல் கம்பங்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சென்டர் மீடியானில் மோதி கவிழ்ந்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. லாரியில் இருந்த இருவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்களுக்கு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்து காரணமாக அப்பகுதியில் சாலையின் ஒரு பகுதியில் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது.