திருச்சி மாவட்டம் மணப்பாறை மதுரை சாலையில் உள்ள குறிஞ்சி மினி மஹாலில் இன்று பாஜக நகர நிர்வாகிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் தலைவர் கோல்டு கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் பூத் வாரியாக முகாம் ஏற்படுத்தி புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் பொது மக்களுக்கு தெரியப்படுத்தி பயன் பெற வைப்பது, புதிதாக கிளை தலைவர்களை நியமிப்பது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை செய்யபட்டது. இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மணப்பாறையை சேர்ந்த நிர்வாகிகள், அடிப்படை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.