திருச்சி தெற்கு மாவட்ட தி. மு. க கழகம் சார்பாக, திருவெறும்பூர் தொகுதியில், திருச்சி தெற்கு மாவட்டம் - மாநகர ஆதிதிராவிட நலக்குழு சார்பாக, முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா ஆதிதிராவிடர் நலக்குழு மாவட்ட அமைப்பாளர் எம். சி. சிவக்குமார், சிறப்பு அழைப்பாளர்கள் கழகத் துணைப் பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம். பி. திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி,
மாநில ஆதிதிராவிடர் நலக்குழு செயலாளர் ஆ. கிருஷ்ணசாமி,
மாநகரக் கழகச் செயலாளர் மு. மதிவாணன் ஆதிதிராவிடர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கலைஞர் புகழ் போற்றினர். இறுதியாக மாநகர ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர்
ஜெ. அன்பழகன் நன்றியுரையாற்றினார்.
இந்நிகழ்வில் சேகரன், வண்ணை அரங்கநாதன், செந்தில், மாவட்டத் துணைச் செயலாளர் செங்குட்டுவன் துணைமேயர் திவ்யா, பகுதி கழகச் செயலாளர் நீலமேகம் மற்றும் மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.