புகையிலை பொருள்களை விற்றவா் குண்டா் சட்டத்தில் கைது

63பார்த்தது
புகையிலை பொருள்களை விற்றவா் குண்டா் சட்டத்தில் கைது
திருச்சி எஸ். ஐ. டி. சந்திப்பு அருகே காரில் 240 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருள்களை கடத்திய ப. ஸ்ரீநாத், வே. செல்வகுமாா் ஆகிய இருவரையும் அரியமங்கலம் போலீஸாா், கைது செய்து விசாரித்தனா். விசாரணையில் அவா்கள், கடத்தி வந்த புகையிலைப் பொருள்களை திருமலைசமுத்திரத்தைச் சோ்ந்த க. சுரேஷ் (49) என்பவா் மூலமாக திருச்சி மாவட்டம் முழுவதும் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், சுரேஷையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

விசாரணையில், சுரேஷ் மீது புகையிலைப் பொருள்கள் கடத்தியதாக 2 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

இவரது தொடா் குற்ற நடவடிக்கையைத் தடுக்கும் விதமாக திருச்சி மாநகர காவல் ஆணையா் ந. காமினி, க. சுரேஷை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திங்கள்கிழமை ஆணை பிறப்பித்தாா்.

தொடர்புடைய செய்தி