புத்தாண்டு தினத்தை அடுத்து உலகின் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டங்கள் களைகட்டின.
இதன் ஒரு பகுதியாக திருச்சியில் பல்வேறு பகுதிகளில் நட்சத்திர ஓட்டல் , மால்களில் நடைபெற்ற ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் மற்றும் வானவேடிக்கையுடன் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.
கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அனைத்து கிறிஸ்தவ சபைகளிலும் இரவு முதல் புத்தாண்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
இதன் ஒரு பகுதியாக நீதிமன்றம் அருகே உள்ள மாணவர்கள் சாலை , காவேரி மேம்பாலம், பாரதிதாசன் சாலை , டிவிஎஸ் டோல்கேட், ஜங்ஷன் மேம்பாலம், சென்னை தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் இளைஞர்கள் சாலையில் கூட்டமாக ஒன்று கூடி புத்தாண்டை வரவேற்றனர். அவர்களது கார் மற்றும் இரண்டு சக்கர வாகனத்தில் அதிக ஒலிகளை எழுப்பி கொண்டு முக்கிய சாலையில் வலம் வந்தனர்.
இளைஞர்கள் அட்ராசிட்டி மற்றும் சாகசம் என்ற பெயரில் வாகனத்தின் உதிரி பாகங்களை சாலையில் உரசி கொண்டு தீப்பொறி வெளி வருவது போல் பொதுமக்களை அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை ஓட்டி சென்றனர்.
புத்தாண்டு நாளில் குடி போதை மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறியும் அதிவேகமாக சென்ற வாகனங்களின் பதிவு எண்ணை சேகரித்து அபராதம் விதித்தனர்.