திருச்சி ஸ்ரீரங்கம் காவல் சரகத்திற்குட்பட்ட பகுதியில் 45 இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
சனிக்கிழமை நடைபெறும் விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் பகுதிகளில் உள்ள பல்வேறு தெருக்களில் விநாயகா் சிலைகள் வைக்க காவல் துறையிடம் அனுமதி கேட்டிருந்தனா். இதையடுத்து காவல் துறையினா் ஆய்வு செய்து 45 இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்க அனுமதித்துள்ளனா். வேறு இடங்களில் விநாயகா் சிலைகள் அமைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றனா்.