மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் முக்கொம்பு மேலணைக்கு வந்ததுடன், தற்போதைய நிலவரப்படி நீர்வரத்து 5ஆயிரம் கனஅடியாக உள்ளது. அந்தநீர் அப்படியே காவிரிஆற்றில் வெளியேற்றப்படுகிறது.
விவசாயிகளை வாழவைக்கும் வகையில் முக்கொம்பு வந்தடைந்த நீரை பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் மலர்தூவியும், நெல் விதைகளை தூவியும் வரவேற்றனர். மேலும் காவிரியை வாழ்த்தும் விதமாக வாழ்த்து முழக்கங்களையும் எழுப்பினர்.
முன்னதாக காவிரித்தாய் சிலை, ராஜராஜசோழன் சிலை ஆகியவற்றிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முக்கொம்பு விலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் நாளை அதிகாலை கல்லணை சென்றடையும். கல்லணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீரானது நாளை காலை திறக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பாசனவாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் கடைமடை வரை தண்ணீர் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது, எனவே அரசு பாசனவாய்க்கால்களை தூர்வாரவேண்டும் மேலும் ஏரி, குளங்களில் தண்ணீரை சேமித்துவைக்கவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கையினை முன்வைத்தனர்.