திருச்சியில் விவசாயிகள் பேரணி

63பார்த்தது
திருச்சியில் விவசாயிகள் பேரணி
ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்.
மேலும் கடந்த ஆண்டு கர்நாடக அரசு நமக்கு வழங்க வேண்டிய 98 டிஎம்சி நிலுவை தண்ணீரையும் தமிழக அரசு பெற்றுத் தர வேண்டும்.

மேகதாது அணைக்கட்டும் பணியை தடுத்து நிறுத்தி வேண்டும்.

ராசி மணலில் அணைக்கட்ட மத்திய அரசு தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும்.

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காவேரி கடைமடை பகுதியான பூம்புகார்
பகுதியில் இருந்து விவசாயிகள் நீதி கேட்கும் பேரணி PR பாண்டியன் தலைமையில் நேற்று தொடங்கியது
தொடர்ந்து இரண்டாம் நாளான இன்று காலை பேரணியானது கல்லணை பகுதியில் தொடங்கியது தொடர்ந்து பேரணியானது திருச்சி வந்தடைந்தது

அவர்களுக்கு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு வரவேற்றார்


திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே பேரணி முடிவுற்று கூட்டம் நடைபெற்றது இதில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோசங்களை எழுப்பினர்

மேலும் ஜல் சக்தி இணை அமைச்சராக கர்நாடகாவை சார்ந்த சோமண்ணா நியமிக்கப்பட்டுள்ளார் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு எதிராக கோசங்களை எழுப்பினர்


தொடர்ந்து பேரணியானது மேட்டூர் அணையை நோக்கி புறப்பட்டது இந்த பேரணி நாளை மேட்டூர் அணை செல்ல உள்ளது

இதில் 100 கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :