திருச்சி மத்திய பேருந்து நிலையத்தின் அவல நிலை

53பார்த்தது
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தின் அவல நிலை
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் புறநகர் பேருந்துகள், நகரப் பேருந்துகள் என தினந்தோறும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் வந்து செல்கின்றன. இவற்றில் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்தநிலையில், மத்திய பேருந்து நிலையத்தில் உறையூர், ஶ்ரீரங்கம் செல்லும் நகரப் பேருந்துகள் நிற்கும் இடத்தில் கழிவுநீர் வடிகாலின் மீது கான்கிரீட் தளம் போடப்பட்டு, அதன் மீது நடைபாதையும், பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் அமர இருக்கைகளும் போடப்பட்டுள்ளன. இந்த கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை அண்மையில் மாநகராட்சி சார்பில் அகற்றும் பணி நடைபெற்றுள்ளது. இதற்கென சில இடங்களில் கான்கிரீட் தளம் பெயர்க்கப்பட்டும், சில இடங்களில் கால்வாய் சிலாப்களை திறந்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இவை சரிவர மூடப்படாமல் அப்படியே போடப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி