தமிழக அரசு உயர்த்தியுள்ள மின் கட்டணத்தை ரத்து செய்ய கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மின் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தி உள்ளது இதனை திரும்ப பெறப்கோரியும் , மேலும் ஒன்றிய அரசின் உதய் மின் திட்டத்திலிருந்து தமிழக அரசு வெளியேற கோரியும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மாவட்ட செயலாளர் சிவா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இதில் சிறப்பு மத்திய கட்டுப்பாடு குழு உறுப்பினர் செல்வராஜ், AITUC மாவட்ட பொதுச் செயலாளர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்
இதில் தமிழ்நாட்டில் சிறு குறு நடுத்தர உள்ளிட்ட அனைத்து தொழில்களும் கடும் நெருக்கடியின் மத்தியில் தொழில் செய்ய முடியாமல் பல்வேறு சிரமங்களை சந்தித்து வரும் நிலையில் தொடர்ந்து மின் கட்டண உயர்வு ஏறிக்கொண்டே இருப்பதால் வீடுகள் உட்பட கடும் பாதிப்பை உருவாக்கும் புதிய மின்சார கட்டண உயர்வை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும் என தெரிவித்தனர்