பள்ளி மாணவ மாணவிகளுக்கான செஸ் போட்டி

64பார்த்தது
பள்ளி மாணவ மாணவிகளுக்கான செஸ் போட்டி
பள்ளிக்கல்வித்துறை மற்றும் சமூக நலத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் கீழ் வட்டார அளவிலான பள்ளி மாணவிகளுக்கான சதுரங்க போட்டிகள் (செஸ்) திருச்சியில் தொடங்கியது.
திருச்சி புனித பிலோமினாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மேற்கு ஒன்றிய அளவிலான பள்ளி மாணவிகளுக்கான சதுரங்க போட்டியினை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். இதில் திருச்சி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று செஸ் விளையாடினர். அப்போது பிலோமினாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் அக்ஷரா என்ற மாணவியுடன் ஆட்சியர் பிரதீப்குமார் செஸ் விளையாடினார். தொடர் காய் நகர்த்தலுக்கு பின்னர் அபாரமாக விளையாடிய அக்ஷரா மாவட்ட ஆட்சியரை தோற்கடித்தார். தோல்வியை சந்தித்த ஆட்சியர், பள்ளி மாணவிக்கு வாழ்த்துக்களை கூறி தொடர்ந்து அனைவரும் செஸ் போட்டியினைக்கற்று, சிறப்பாக விளையாட வேண்டுமாய் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி