நடிகை ராதிகா சரத்குமார் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்துக் கொண்டதாக தகவல் தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் சில புகைப்படங்களை பதிவிட்ட அவர், "நான் 2 மாதங்களாக மிகவும் கஷ்டப்பட்டு விட்டேன். 2 படங்களில் வேலை செய்தேன். அப்போது என் முழங்காலில் அதீத வலி இருந்தது. ஒரு கட்டத்தில் அறுவை சிகிச்சை தான் ஒரே வழி என்றானது. அதன்படி, அறுவை சிகிச்சை செய்து கொண்டேன்" என்று கூறியுள்ளார்.