திருச்சி வருமானவரித்துறை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

81பார்த்தது
திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல். போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி இருக்கும் ஜாஃபர் சாதிக்கை விடுவிக்க கூறியும், சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் இருக்கும் இடம் TGTE தெரியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டலில் சென்னையில் ஏழு பள்ளிகளுக்கு உள்ளிட்ட 11 பேருக்கு மேல் முகவரியில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மாநகர போலீசார் வில்லியம்ஸ் ரோட்டில் அமைந்துள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் திருச்சி மாநகர போலீசார் மோப்ப நாய்கள், மெட்டல் டிடெக்டர் கருவிகள் உதவியுடன் சோதனை நடத்தி எந்த வித வெடிப்பொருட்களும் கிடைக்கவில்லை என தகவல் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி