40 டிகிரி வெயிலால் வாழை விவசாயம் கடும் பாதிப்பு

57பார்த்தது
40 டிகிரி வெயிலால் வாழை விவசாயம் கடும் பாதிப்பு
திருச்சி ஸ்ரீரங்கம் சோமரசம்பேட்டை, வயலூர், கோப்பு, சிறுகமணி, மணிகண்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் என திருச்சி மாவட்டத்தில் சுமார் 32, 000 ஏக்கர் பரப்பளவில் நேந்திரம், பூவன், ரஸ்தாலி, கற்பூரவள்ளி, மொந்தன் என பல்வேறு வாழை ரகங்கள் பயிரிட்டுள்ளனர்.

ஜூன் மாதத்தில் தமிழக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட்டதால் மேட்டூரில் போதிய அளவு தண்ணீர் இருப்பு இல்லாத நிலையில், பருவ மழையும் பொய்த்துள்ளதால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக்கப்பட்டதால் வாழைப் பயிர்களுக்கு தேவையான நீர் கிடைக்கவில்லை. வாய்க்கால் பாசனம் செய்யும் விவசாயிகள் கூட, நிலத்தடி நீர்மட்டம் முற்றிலும் குறைந்ததால் மோட்டார் மூலம் பாசனம் செய்ய முடியாமல் தண்ணீர் இன்றி வாழை மரங்கள் முதிர்ச்சி அடைந்தும் நிற்ககூட முடியாமல் நொடிந்துபோய் சாய்ந்து கிடப்பதுடன், வாழை தார்கள் போதிய திரட்சி இல்லாமல் மரங்களிலேயே பழுத்து காய்ந்து கிடக்கின்றது. சந்தையில் கூட வாழைத்தார்களை பார்த்து வியாபாரிகள் வாங்க மறுப்பதால், வாழைத்தார்களை அறுத்துக் கொண்டு சந்தைப்படுத்த அதிக கூலி, செலவாகும் என்பதால் அதையும் அறுக்காமல் அப்படியே விட்டுவிட்டனர் விவசாயிகள்.

வாழை பயிர்கள் 27 டிகிரி - 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தில் மட்டும் தான் வளரும், தற்போது திருச்சி மாவட்டத்தில் 42 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவான நிலையில் வாழை மரங்கள் வளர்ச்சி முற்றிலும் அழிந்துபோனது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி