திருச்சியில் அதிமுக அப்சரா ரெட்டி தீவிர வாக்கு சேகரிப்பு

65பார்த்தது
திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வெற்றி வேட்பாளராக கருப்பையா போட்டியிடுகிறார்.

இதன் ஒரு பகுதியாக, அதிமுக செய்தி தொடர்பாளர் அப்சரா ரெட்டி, திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வெற்றி வேட்பாளர் கருப்பையாவுக்கு ஆதரவாக, இன்று திருச்சி மலைக்கோட்டை பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட கழக, மகளிர் அணி மாவட்ட செயலாளர் நசீமா பாரிக், புதுக்கோட்டை மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் பிரியா, மாவட்ட பிரதிநிதி இந்து உள்ளிட்ட அதிமுக மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் அதிமுகவினர், மலைக்கோட்டை சுற்றியுள்ள சின்னக்கடை வீதி, பெரிய கடைவீதி, சந்து கடை, ஜாபர்ஷா தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், நகை கடைகள், மருந்து கடைகள், தரைக் கடை வியாபாரிகள் உள்ளிட்ட பொதுமக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர்.

அப்போது, அதிமுக செய்தி தொடர்பாளர் அப்சரா ரெட்டி, தன்னை புன்முறுவலோடு வரவேற்ற பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோரிடம் அன்பாக பேசி, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு துண்டு பிரசுரங்களை வழங்கி, இளம் வாக்காளர்கள் முதல், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்டோரிடம் வாக்குகளை சேகரித்தார். அப்போது பொதுமக்கள் அவருடன் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி