கஞ்சா விற்க வைத்திருந்த இருவர் கைது

55பார்த்தது
கஞ்சா வாங்கி விற்பனை செய்வதாக இரண்டு பெண்கள் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு. ஒரு பெண் உள்பட இருவர் கைது

முசிறியில் இயங்கும் துறையூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு
போலீசாருக்கு மணப்பாறையில் கஞ்சா விற்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைக்கப்பெற்றது. அதன் பேரில் காவல் ஆய்வாளர் செல்லதுரை மணப்பாறை நல்லாண்டவர் கோவில் பஸ் ஸ்டாப் அருகில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற இருவர் போலீசாரை கண்டதும் ஓட முயற்சித்தனர். அவர்களை பிடித்து சோதனை செய்ததில் அவர்கள் வைத்திருந்த பையில் 8 கிலோ 150 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை செய்ததில் அவர்கள் திருச்சி ராம்ஜிநகர் ஹரி பாஸ்கர் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜாராம் 31 மற்றும் அவரது மனைவி தீபிகா 24 என தெரிய வந்தது. தீவிர விசாரணை மேற்கொண்டதில் தீபிகாவின் தந்தை ராஜா மற்றும் தாயார் சுசீலா ஆகியோர் வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து மகன் ராஜா மற்றும் மகள் தீபிகா மருமகன் ராஜாராம் ஆகியோரிடம் கொடுப்பதும் அவர்கள் சில்லறையில் வியாபாரம் செய்வதும் தெரிந்தது. இதை அடுத்து ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து ராஜாராம் மற்றும் தீபிகாவை கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி