முசிறி அரசு பள்ளியில் ஆதார் அட்டை எடுக்க சிறப்பு முகாம்

78பார்த்தது
முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆதார் அட்டை எடுக்க சிறப்பு முகாம்

திருச்சி மாவட்டம் முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் உத்தரவுபடி பள்ளி மாணவர்களுக்கு புதிய ஆதார் அட்டை எடுக்கவும், திருத்தம் மேற்கொள்ளவும், சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் தலைமை வகித்து மாணவர்களுக்கு ஆதார் அட்டை எடுக்கும் சிறப்பு முகாமினை துவக்கி வைத்தார். திமுக ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், நகரச் செயலாளர் சிவக்குமார், இளைஞர் அணி மாவட்ட நிர்வாகி கார்த்திக், துவக்கப்பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் மதியழகன் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் பல்த்தசார் அனைவரையும் வரவேற்றார். ஆதார் பதிவு அலுவலர் ஜெயலட்சுமி மாணவர்களுக்கு புதிய ஆதார் அட்டை எடுக்கவும் பழைய ஆதார் அட்டையில் திருத்தங்களையும் மேற்கொண்டார். முகாமில் விளையாட்டு ஆசிரியர் மருதை வீரன், ஆசிரியர் சிவராஜ் நகர் மன்ற உறுப்பினர்கள் பாலகுமார் முகேஷ் வசந்தகுமார் நகர துணை செயலாளர் சிவக்குமார் முருகன் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவில் உதவி தலைமை ஆசிரியர் நாகேஷ் நன்றி கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி