முசிறியில் இருசக்கர வாகனத்தில் சேலை சிக்கி விழுந்தவர் பலி

65பார்த்தது
முசிறியில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது சக்கரத்தில் சேலை சிக்கியதால் கீழே விழுந்த மின்வாரிய ஊழியர் படுகாயம் அடைந்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போன சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தா. பேட்டை தேவாங்கர் தெருவை சேர்ந்தவர் செல்வம் இவரது மனைவி கௌசல்யா (59)முசிறி மின்வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார். சொந்த ஊர் தா. பேட்டை என்ற போதிலும் வேலைக்கு வந்து செல்வதற்கு வசதியாக கணவன் மனைவி முசிறியில் குடியிருந்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் செல்வம் தனது மனைவியை வழக்கும் போல் தனது மொபெட்டில் ஏற்றி கொண்டு முசிறியில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு விடுவதற்காக சென்று உள்ளார். மின்வாரிய அலுவலகம் அருகே சென்றபோது கௌசல்யாவின் சேலை மொபெட்டின் சக்கரத்தில் சிக்கியதில் கீழே விழுந்துள்ளார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கணவர் செல்வம் கௌசல்யாவை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி கௌசல்யா பரிதாபமாக நேற்று இறந்து போனார்.
இதுகுறித்து செல்வத்தின் மகள் கிருத்திகா (34)என்பவர் முசிறி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்
கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி