எம் எல் ஏ காடுவெட்டி தியாகராஜன் வாக்குப்பதிவு

85பார்த்தது
திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் தாலுக்கா காடுவெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முசிறி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் தனது வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமையாற்றினார்.
இன்று தமிழ்நாட்டில் மக்களவைக் காண தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேர்தலை முன்னிட்டு காலை 7 மணிக்கு முன்னதாக வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்திக் காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சரியாக ஏழு மணிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாக்குப்பதிவை தொடங்கினர். தொட்டியம் அருகே உள்ள காடுவெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் மக்களுடன் வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமை ஆற்றினார். வாக்கு சாவடி மையத்தில் பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி