அரசு கல்லூரியில் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

70பார்த்தது
அரசு கல்லூரியில் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி
முசிறி அரசு கல்லூரியில் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சி முகாம்.

முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ மாணவிகளுக்கான வழிகாட்டுதல் பயிற்சி முகாம் 3ம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் து. கணேசன் வழிகாட்டுதல் பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். விழாவில் வரலாற்று துறை பேராசிரியர் ரெ. அகிலா, தமிழ் துறை பேராசிரியர் பெரியசாமி மற்றும் சி. க. சிவகுமார், விலங்கியல் துறை பேராசிரியர் கோ. பிரபாவதி , சமூக பணி அறிவியல் துறை பேராசிரியர் மார்சியல், மருத்துவர் மீரா மோகன், அறக்கட்டளை இயக்குனர் யோகநாதன், மனநல மருத்துவ நிபுணர் தினேஷ் குமார், பேராசிரியர் அருள், தண்டலைபுத்தூர் பள்ளி தலைமை ஆசிரியர் புகழேந்தி, ஆகியோர் கலந்து கொண்டு, மாணவர்களை ஊக்கப்படுத்தி உயர்கல்வியை தொடர பல்வேறு ஆலோனைகளை வழங்கினர். இணை பேராசிரியர் பாக்யரதி வழிகாட்டுதலில் மூத்த மாணவ மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் விலங்கியல் துறை இணை பேராசிரியர் மருதநாயகம் செய்திருந்தார். விழா நிறைவில் விலங்கியல் துறை பேராசிரியர் பா. வீராசாமி நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி