துறையூர் அருகே உள்ள உப்பிலியபுரம் மூப்பனார் தெரு பகுதியை சேர்ந்தவர்கள் கமல் மற்றும் மோகன்தாஸ் இருவரும் உறவினர்கள் சம்பவம் நடந்த நேற்று இவர்கள் இருவருக்குள்ளும் வார்த்தைச் சண்டை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மோகன்தாஸ் தாக்கியதில் கமல் தலைப்பகுதியில் காயமடைந்து துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து கமல் அளித்த புகாரின் பேரில் அவரை தாக்கிய மோகன்தாஸ் மீது வழக்கு பதிவு செய்து உப்பிலிபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.