கிராவல் மண் கடத்தல் வாகனம் பறிமுதல் ஓட்டுநர் கைது

80பார்த்தது
கிராவல் மண் கடத்தல் வாகனம் பறிமுதல் ஓட்டுநர் கைது
முசிறி அருகே கிராவல் மண் கடத்தலில் ஈடுபட்ட ஜேசிபி வாகனம் மற்றும் ஒட்டுநர் கைது.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே வெள்ளூர் ஊராட்சியை சேர்ந்த மூவேலி பகுதியில் அனுமதியின்றி கிராவல் மண் கடத்தப்படுவதாக கோட்டாட்சியர் இராஜனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது ப அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கே கிராவல் மண் அள்ளுவதற்கு தயாராக இருந்த ஜேசிபி வாகனம் மற்றும் டிரைவரை பிடித்துள்ளனர். பின்னர் கோட்டாட்சியர் இராஜன் ஆலோசனையின் படி வெள்ளூர் கிராம நிர்வாக அலுவலர் பிரியா மண் கடத்தலில் ஈடுபட்ட ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்து, செல்லிபாளையம் கிழக்குத் தெருவை சேர்ந்த பெரிய சோழன் மகன் கோபிநாத் ( 30) என்பவரையும் கைது செய்து முசிறி காவல் நிலையத்தில் ஒப்படைத்தன், மேலும் இதில் சம்பந்தப்பட்ட நிலத்தின் சொந்தக்காரர் பெரியசாமி (30) மற்றும் லாரியின் உரிமையாளர் அழகாகப்பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் (45 ) ஆகியோர் மீது , முசிறி போலீசார் வழக்கு பதிவு செய்து, ஜேசிபி ஓட்டுநர் கோபிநாத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து தப்பிச்சென்ற லாரி மற்றும் ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர். இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காலாவதியான மண் அள்ளும் உரிமைத்தை வைத்து இது போன்று தொடர் மண் கடத்தலில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி