குரம்புப் பணிகளை விரைந்து முடிக்க விவசாயிகள் கோரிக்கை

50பார்த்தது
11 கோடியில் கட்டப்படும் குரம்பு வேலை திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் காட்டுப்புத்தூர் வாய்க்கால் பாசன விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை.

கடந்த 90 நாட்களாக வாய்க்காலில் தண்ணீர் வரத்து இல்லாததால் விவசாய பணிகள் தேக்கம்.

தொட்டியம், ஜூலை, 16
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் வாய்க்கால் பாசன விவசாயிகள் மோகனூரில் கட்டப்பட்டு வரும் குரம்பு வேலை திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் தொட்டியம் முசிறி உள்ளிட்ட பகுதிகள் காவிரி டெல்டா பாசன பகுதியாக கருதப்படுகிறது காவிரி ஆற்றின் கிளை வாய்க்கால்கள் மூலம் கரையோர பகுதிகள் பயன்பெறுகிறது.
இந்நிலையில் காவிரி ஆற்றில் வரும் தண்ணீர் விவசாய பாசனத்திற்கு போதிய அளவில் இருப்பதற்காக காவிரி ஆற்றின் பக்கவாட்டில் நிரந்தர குரம்பு அமைக்க வேண்டும் என விவசாயிகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர். இது குறித்து முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் சட்டசபையில் கோரிக்கை விடுத்து பேசினார். அதனைத் தொடர்ந்து நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு பரிந்துரையின் பேரில். தமிழக அரசு காவிரி ஆற்றில் குரம்பு அமைப்பதற்காக தமிழக அரசு 11 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.

தொடர்புடைய செய்தி